உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

கூடலூர்: உணவு தேடி வந்த இடத்தில், தென்னை மரத்தை சாய்த்தபோது உயர் அழுத்த மின்கம்பியின் மீது மரம் விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் காட்டு யானை பலியானது. கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் புல்பள்ளி கிராமத்தை அடுத்த தேசானக்கரை பகுதியில் வசிப்பவர் விவசாயி ராஜேஷ். இப்பகுதிக்கு வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கை. இந்நிலையில் இவரது தோட்டத்திற்கு நேற்று அதிகாலை நேரத்தில் ஒரு காட்டு யானை வந்தது.

அந்த யானை அங்குள்ள தென்னை மரத்தை முறித்து கீழே சாய்த்துள்ளது. அப்போது அந்த மரம் அந்த வழியாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் விழுந்தது. இதனால் மரத்தில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானையும் சம்பவ இடத்திலேயே பலியானது. சம்பவ இடத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து இறந்த 20 வயது ஆண் யானைக்கு உடற்கூறாய்வு செய்வதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி மீது செல்போன் வீச்சு: நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு

எல்லையோர மக்கள் உடனே வெளியேற உத்தரவு லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம்: ஹிஸ்புல்லா மறுப்பு; சர்வதேச விமானங்கள் ரத்து

அக்டோபர் 3வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது வட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு