தண்ணீர் தேடி வந்து சேற்றில் சிக்கிய யானை

குடகு : வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த யானை சேற்றில் சிக்கிய சம்பவம் குஷால்நகர் தாலுகாவில் நடந்துள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் குஷால்நகர் தாலுகாவின் பாளுகோடு கிராமத்தின் கெரேமூலே பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த யானை சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் மயங்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரத்துடன் வனத்துறை ஏசிஎப் வேணுகோபால், ஆர்எப்ஓ ரத்தன்குமார், டிஆர்எப்ஓக்களான ரஞ்சன், தேவய்யா, அனில் சேர்ந்து ஆர்ஆர்டி ஊழியர்கள் நேரில் வந்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பின்னர் அந்த யானை மீட்கப்பட்டது. சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட யானை ஆனேக்காடு வனப்பகுதிக்கு சென்றது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு