மின்சார வேலியில் சிக்கி யானை பலி

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே கரும்பாறை பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறி நாள்தோறும் 3 காட்டு யானைகள் மாலை 5 மணி முதல் அதிகாலை வரை விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 20 வயது மதிக்கத்தக்க கட்டையன் என்ற ஆண் யானை கரும்பாறை பகுதிக்கு வந்தது.

அங்கு மழைநீர் ஓடையின் குறுக்கே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின்சார வேலியில் சிக்கி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து அந்தியூர் வனத்துறையினர் மற்றும் கள்ளிப்பட்டி மின் வாரியத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பெண் டாக்டர் தற்கொலை

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி