Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி

சென்னை: மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்து வரும் 28ம் தேதி முதல் 29ம் தேதி வரை 2 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பட்டறை பயிற்சி வரும் 28ம் தேதி முதல் 29ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிப் பட்டறையின் முக்கிய மதிப்பு முன்மொழிவுகள் வணிக சந்தைப்படுத்துதலின் அடிப்படைகள், வளர்ச்சிக்கான அலகு பொருளாதாரம், முக்கிய அளவீடுகளைப் புரிந்துகொள்ளுதல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதலின் இரகசியங்கள், வெற்றிக்கான தந்திரங்கள் மற்றும் கருவிகள் குறிப்புக்கான நிகழ்வு ஆய்வுகள்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி, செல்போன் எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032, கைபேசி எண்கள் 9360221280, 9543773337 முன்பதிவு அவசியம், அரசு சான்றிதழ் வழங்கப்படும்.