மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த பெரிய போட்டியாக இருக்கப் போவது, மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பில் இறங்குவதுதான் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த சென்னை வர்த்தக மற்றும் தொழில் துறையின் 188வது ஆண்டுக் கூட்டம் நடந்தது. அதில் தகவல் தொழில் நுட்ப அமைச்சக செயலாளர் கிருஷ்ணன் பேசியதாவது: மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பு வேகமெட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பு பெரும் போட்டியாக இருக்கப் போகிறது. ‘தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் உதிரி பாகங்கள் திட்டத்தை ஒன்றோடோன்று இணைக்கும் இறுதி கட்டத்தில் உள்ளது, இது குறிப்பாக 4-5 குழுக்கள் கொண்ட கூறுகளை அடையாளம் கண்டு முன்னோக்கி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. நாங்கள் சரியான நேரத்தில் விவரங்களை கோடிட்டுக் காட்டுவோம்.’

மின்னணு தயாரிப்பு பணிகள் (எலக்ட்ரானிக்ஸ் மேனுபேக்ச்சரிங் சர்வீசஸ்) துறையில் தமிழ்நாடு ஒரு பெரிய பங்காற்றுவதாகவும், உள்நாட்டில் தயாரிக்கக்கூடிய கூறுகளின் எண்ணிக்கையில் அதன் போட்டியை மேம்படுத்த வேண்டும்.
மாநிலத்தின் பலம், மேம்பட்ட உற்பத்தி மற்றும் துல்லியமான உற்பத்தி போன்ற அம்சங்கள். தமிழ்நாடு ஒரு வலுவான வாகன உதிரிபாகத் தொழிலின் வலிமையைக் கொண்டு உதிரிபாகங்கள் உற்பத்திக்கு மாறுவது ஒப்பீட்டளவில் எளிதானது. இதில் எம்.எம்.எம்.இ.,க்களும் பங்கு வகிக்கலாம். ஆட்டோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பசுமை ஆற்றல் (கிரீன் எனர்ஜி) போன்ற பிரிவுகளுக்கு இந்த கூறுகள் இன்றியமையாததாக இருக்கும்.

செமிகண்டக்டர் ஸ்பேஸில் குழுக்களை (க்ளஸ்டர்கள்) கொண்டிருப்பதில் பெரும் நன்மைகள் இருக்கிறது. நாடு முழுவதும் செமிகண்டக்டரை விநியோகிக்க வேண்டும் என்ற கருத்து உண்மையில் வேறு எங்கும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் தற்போதைய கிளஸ்டர் குஜராத்தில் உள்ள தோலேரா, சனந்த் ஆகியவற்றின் மீது முழு கவனத்தை செலுத்தி வருகிறது. மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பயன்படுத்தக்கூடிய கலவையான குறைக்கடத்தி(செமிகண்டக்டர்கள்)தயாரிக்கும் நிலையில் தமிழ்நாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல செமிகண்டக்டர்கள் தயாரிப்புக்கு வேண்டிய உயர் தூய்மை இரசாயனங்களும் அதிகம் தேவைப்படுவதால், அந்த ரசாயனங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டியது அடுத்தகட்டமாக இருக்கும் என்றும் கருதுகிறேன். எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் குறைக்கடத்திகளை வடிவமைக்கும் அம்சங்களில் எங்கெல்லாம் நிறுவனங்கள் பங்களிக்க முடியுமோ அங்கெல்லாம் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பேசினார்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்