கோயில் மின்விளக்கு அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து 2 வாலிபர்கள் பலி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயில் அருகே சுவாமி உருவங்களை மின்விளக்குகளால் அலங்கரித்த கட்அவுட் வைத்திருந்தனர். இந்த பணியை அதே கிராமத்தை சேர்ந்த ஒலி, ஒளி அமைக்கும் வேலை பார்த்து வரும் சாமிக்கண்ணு மகன் ஐயப்பன்(20), ஜெயராமன் மகன் ஐயப்பன்(22) ஆகியோர் செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை செங்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது கட்அவுட்டில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளது. இதனால் ெஜ.ஐயப்பன் மற்றும் எஸ்.ஐயப்பன் ஆகியோர் கட்அவுட்டில் ஏறி மின்விளக்குகள் பழுதை சரிசெய்ய முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்விளக்குகளில் இணைத்திருந்த மின் வயர் அறுந்து இருவர் மீதும் விழுந்தது.

இதில் மின்சாரம் பாய்ந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அங்கிருந்த மக்கள் இருவரையும் மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து, செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மின்சாரம் தாக்கியதில் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதுகுறித்து மேல் செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!