மின் இணைப்புக்கு லஞ்சம் மின்வாரிய அதிகாரி கைது

சென்னை: வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.2000 லஞ்சம் வாங்க முயன்றபோது மின் அதிகாரி கைது செய்யப்பட்டார்.ஆவடி அடுத்த வீராபுரத்தில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு, சுரேஷ் (35) ஆட்டோ டிரைவர். இவர் புதிதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு ஆவடி வீராபுரம் மின்வாரிய கமர்சியல் ஆடிட்டர் அன்பழகன் (45) என்பவரை கடந்த மாதம் அணுகினார். அப்போது, புது மின் இணைப்புக்கு ரூ.2000 லஞ்சம் கேட்டார். ஆனால், பணம் தராத காரணத்தால், ஆட்டோ டிரைவர் சுரேஷ் வீடு-மின் அலுவலகத்துக்கு திரிந்தும் பயனில்லை.

அப்போதுதான் அன்பழகன் லஞ்சம் 2000 கொடுத்தால் தான் மின் இணைப்பு என்று கூறிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கூறியபடி, சுரேஷ் நேற்று ரூ. 2000 லஞ்ச பணம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் அன்பழகனை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு