மின்சார வாரிய விவகாரம் எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது போன்றவற்றை மின்சார வாரியத்தின் மூலமாகவோ அல்லது தமிழக அரசு மூலமாகவோ செயல்படுத்தாமல், தனியார் வசம் ஒப்படைக்கப்படும் வகையில்­ பசுமை எரிசக்தி கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. மின் வாரியம் தனியார்மயமாக்கப்பட்டால் விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம், வீடுகள் மற்றும் நெசவாளர்களுக்கு சலுகை கட்டணத்தில் மின்சார திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

Related posts

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு