புயல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட மின்சார ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட மின்சார ரயில் சேவை மீண்டும் தொடக்கபட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகள், தெருக்கள், ஆறுகள் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீரினை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் மழை நீர் ரயில் தண்டவாளத்தில் அதிக அளவில் தேங்கியதால் சென்னை மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதனால் 2 நாட்களாக மின்சார ரயில் இயங்காமல் இருந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் நேற்று முதல் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.மேலும் இன்று இயக்கப்படும் அட்டவணையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: புறநகர் ரயில் சேவைகள் நேற்று பிற்பகல் 2 மணி முதல் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 30 நிமிடதிற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல, சென்னை கடற்கரை – திருவள்ளூர் – அரக்கோணம் (பெரம்பூர் வழியாக) வழித்தடத்திற்கு 30 நிமிடதிற்கு ஒரு ரயிலும், திருவொற்றியூர் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்திற்கு 1 மணிநேரதிற்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, வேளச்சேரி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே எம்ஆர்டிஎஸ் பிரிவில் 30 நிமிட இடைவெளியில் ஒரு ரயில் என நேற்று மாலை 3 மணி முதல் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இன்றும், நேற்று அட்டவணை படியே ரயில் சேவை இயங்கும்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்