தேர்தல் சின்னங்கள் மதச்சார்புள்ளவையாக இருக்க கூடாது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தத்தை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தலின் போது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 1975ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 உட்பிரிவு 3ல் மத சின்னங்களை பயன்படுத்துவது ஊழல் நடவடிக்கை எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 1975ம் ஆண்டு இந்த சட்டப்பிரிவில், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னங்களை மத சின்னங்களாகவோ, தேசிய சின்னங்களாகவோ கருதக் கூடாது என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதால் இந்த சட்டத் திருத்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Related posts

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!