மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தின் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்திற்குள் பதிவான வாக்கு சதவீதத்தின் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனுவை இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதி அளித்துள்ளார்.

வாக்கு சதவீதங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் உள்ளிட்டவை வாக்காளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஏடிஆர் அமைப்பு மனுவில் தெரிவித்து இருந்தது!

வாக்குப்பதிவின் போது ஒவ்வொரு 2 மணி நேரங்களுக்கு ஒரு முறை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படக்கூடிய வாக்கு சதவீத நிலவரங்களுக்கும் தேர்தல் நிறைவடைந்த உடன் வெளியிடப்படும் வாக்கு சதவீத தரவுகளுக்கும் இடையே 5% மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?