தேர்தல் விதிமுறைகள் மீறி விழா: அதிமுக மாஜி அமைச்சர் பெஞ்சமின் மீது வழக்கு

அண்ணாநகர்: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கிய அதிமுக மாஜி அமைச்சர் பெஞ்சமின் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நெற்குன்றம் மீனாட்சி அம்மன் நகர் பகுதியில் நேற்று, அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுக கொடியை ஏற்றிவைத்து 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்கினார்.

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்ததால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரித்தனர். இதுசம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் குமார் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இந்தநிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் இதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கமலக்கண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு