மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் , நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் வழக்கு !!

சென்னை: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூவர் வழக்கு தொடர்ந்துள்ளனர். 18வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஓ.பன்னீர் செல்வம், திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஐ.யு.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனியிடம் தோல்வி அடைந்தார்.இந்த நிலையில், நவாஸ்கனி, சொத்துமதிப்பை முறையாக காட்டவில்லை என்பதால், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்., ”பிரிந்து கிடக்கும் அதிமுக இணைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதிமுகவை இணைத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கவில்லை.சசிகலா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ” என்றார். இதே போல், விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் மனுத்தாக்கல் செய்துள்ளார். திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் புரூஸை எதிர்த்து நயினார் நாகேந்திரனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா