திருவண்ணாமலை திருச்சி உட்பட 4 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சந்திப்பு: 100% வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டுகோள்

சென்னை: திருவண்ணாமலை, ஆரணி, பெரம்பலூர், திருச்சி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நேற்று ஆலோசனை நடத்தியது. திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தொகுதி வாரியான நிர்வாகிகள் சந்திப்பை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தி வருகிறது. இந்த நிலையில் 10வது நாளாக நேற்று காலை திருவண்ணாமலை, ஆரணி தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது.

இவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் மாவட்ட அமைச்சர்- மாவட்ட செயலாளர்கள்-சட்டமன்ற உறுப்பினர்கள்-மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர் திமுக நிர்வாகிகள்-உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சந்திப்பின் போது தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை-தொகுதி மக்களின் கோரிக்கை-தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து குழுவினர் விரிவாக கேட்டறிந்தனர்.

பாசிஸ்ட்டுகளை விரட்டியடிக்கும் வகையில் 100% வெற்றியை பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அப்போது குழுவினர் கேட்டுக் கொண்டனர். அவதூறுகளும், பொய் பிரசாரங்களும் சூழ்ந்துள்ள இந்த காலகட்டத்தில், அவற்றை முறியடித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாலையில் பெரம்பலூர், திருச்சி தொகுதிகளுக்கான நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற்றது.

 

Related posts

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!

பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!

அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவது, ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்படுவது போல உள்ளது: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்