மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் : இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி : மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. நாடே எதிர்பார்த்த மக்களவை தேர்தலுக்கான தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மக்களவை தேர்தல் என்பது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேதி வாரியாக கூற வேண்டும் என்றால் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என மொத்தம் 7 தேதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் முதற்கட்டமாகவே தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது 7 கட்டங்களாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதில் மே 25 மட்டும் சனிக்கிழமை வருகிறது. பிற 6 தேர்தல் தேதிகளும் வார நாட்களில் நடைபெற உள்ளது. பொதுவாக தேர்தல் சமயத்தில் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் விடுமுறை வழங்கப்படும். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்களுக்கு தபால் ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்படும். இருப்பினும் மக்களவை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு