தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில் பீகார் முதல்வர் லண்டன் பயணம்: பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வந்ததால் பரபரப்பு

பாட்னா: லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில் பீகார் முதல்வர் லண்டன் பயணம் ெசல்கிறார். எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த சில தினங்களுக்கு முன் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான பாட்னாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தார். நிதிஷ்குமாருடன் அவரது நெருங்கிய உதவியாளர் சஞ்சய் ஜா, முதல்வரின் முதன்மை செயலாளர் தீபக் குமார் உள்ளிட்டோர் வந்தனர்.

இதுகுறித்து முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘பாட்னாவில் நாட்டின் மிகப் பெரிய அறிவியல் நகரம் 17 ஏக்கரில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக இங்கிலாந்தில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தை பார்வையிட முதல்வர் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். அதனால் முதல்வர் தலைமையிலான குழு வரும் 7ம் தேதி இங்கிலாந்து செல்கிறது. பீகார் அருங்காட்சியகத்தைப் போலவே அறிவியல் நகரமும் உலகத் தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து இங்கிலாந்து தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்’ என்றன. லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நிதிஷ் குமார் இங்கிலாந்து செல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை