மக்களவைத் தேர்தலில் கிராமப்புறங்களில் பாஜக தோல்வி எதிரொலி: 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தது!!

டெல்லி : மக்களவைத் தேர்தலில் கிராமப்புறங்களில் பாஜக தோல்வி அடைந்ததன் எதிரொலியாக 100 நாள் வேலை திட்டத்திற்கு குறைவான அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு கடந்த நிதியாண்டில் ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. நடப்பு நிதியாண்டில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ரூ.86,000 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டை ஒப்பிட்டால் இது ரூ.26,000 கோடி அதிகம். ஆனால் கடந்த நிதியாண்டில் இந்த திட்டத்தின் உண்மையான செலவான ரூ.1.05 லட்சம் கோடியை விட இது ரூ.19,297 கோடி குறைவு என ஒன்றிய அரசின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு வெறும் 1.78% மட்டுமே என தெரியவந்துள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்து இருப்பதையே இது குறிக்கிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிதி ஒதுக்கீட்டை குறைத்தது மட்டுமல்ல, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிகரித்த நிதித் தேவைகளையும் ஒன்றிய அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் வறுமை ஒழிப்பில் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை என வாதிடும் ஒன்றிய அரசு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக சமிக்னை செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு