தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.. ஸ்மிருதி இரானி மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி..!!

டெல்லி: ஸ்மிருதி இரானியை இழிவாகவும், கேவலமாக பேசுவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் 2019ம் ஆண்டு ராகுல்காந்தியை தோற்கடித்தவர் ஸ்மிருதி இரானி. ஒன்றிய அமைச்சராகவும் அவர் இருந்து வந்தார்.

ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிதி இரானி தோல்வி அடைந்தார். புதிய அரசு அமைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் தங்கள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஸ்மிருதி இரானி இந்த வார தொடக்கத்தில் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்தார் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஸ்மிருதி இரானியை இழிவாகவும், கேவலமாக பேசுவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது;

வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.

ஸ்மிருதி இரானியை இழிவாகவும், கேவலமாக பேசுவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்த தலைவராக இருந்தாலும் இது பொருந்தும் என அவர் அறிவுத்தியுள்ளார்.

ஸ்மிருதி இரானி பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.

மக்களை அவமானப்படுத்துவதும், அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Related posts

2வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை பலப்பரீட்சை: முதல் வெற்றிக்கு முனைப்பு

சென்னையில் இன்று டிஎன்பிஎல் பைனல்: கோவை – திண்டுக்கல் மோதல்

ஹாக்கி காலிறுதியில் இன்று கிரேட் பிரிட்டன் சவாலை முறியடிக்குமா இந்தியா