அபாயகரமான சூழலில் தேர்தல் நடக்கவுள்ளது.. மாநில நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம்: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!!

சென்னை: ஒன்றிய அரசு நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றச்சட்டியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

“மாநில நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம்”: கார்த்தி சிதம்பரம்
ஒன்றிய அரசு நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார். மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு மதிக்கவில்லை. மேலும், இந்தியாவை இந்து நாடாக மாற்ற பாஜக முயன்றுவருவதாக கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார்.

“அபாயகரமான சூழலில் தேர்தல் நடக்கவுள்ளது”: கார்த்தி சிதம்பரம்
மிகவும் அபாயகரமான சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கின்றது. மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் திடீரென ராஜினாமா செய்கிறார். தேர்தல் பத்திர விவரங்களை கொடுக்க முடியாது என்று எஸ்.பி.ஐ. வங்கி தெரிவிப்பதை ஏற்க முடியவில்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை