தேர்தல் பிரசாரத்தின்போது தங்கர்பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த 2 பேர் கைது

*4 கிளிகள் பறிமுதல்

கடலூர் : தேர்தல் பிரசாரத்தின் போது பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.பாஜக கூட்டணி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7ம் தேதி தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயில் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவரிடம் தங்கர்பச்சான் ஜோசியம் பார்த்தார். அப்போது இந்த தேர்தலில் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்றும் அவர் கூறினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்த்த குற்றத்திற்காக கடலூர் வனச்சரக அலுவலர் ரமேஷ் தலைமையிலான வனக்காவலர்கள் மேற்படி இடத்திற்கு சென்று, கிளியை கூண்டில் அடைத்து ஜோசியம் பார்த்த பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (82) மற்றும் அவரது சகோதரர் சீனுவாசன் (72) ஆகிய இருவரையும் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் 4 கிளிகளை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து 2 பேருக்கும் அபராதம் விதித்து ஜாமீனில் விடுவித்தனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி