இம்மாதம் தேர்தல் நடக்க உள்ள ஜம்முவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒரு ராணுவ வீரர் காயம்

ஜம்மு: ஜம்முவின் சுஞ்ச்வான் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்துள்ளார். காயமடைந்த இராணுவ வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனால் ராணுவ முகாம் சீல் வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிய அப்பகுதியில் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. “வான்வழி கண்காணிப்பிற்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டன. ஜம்மு இராணுவத்தை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்களின் காரணமாக உஷார் நிலையில் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், ரியாசி, கதுவா, பூஞ்ச் ​​மற்றும் தோடா மாவட்டங்களில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் 43 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு