எளாவூர் மேம்பால சாலை தடுப்பில் மினி லாரி மோதியதில் 3 பெண்கள் படுகாயம்

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் சென்டர் மீடியனில் மினி லாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். சென்னை காசிமேட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்திற்கு நேற்று காலை மீன் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்றது. டிரைவர் முனுசாமி (36) வண்டியை ஓட்டினார். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அருகில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சென்டர் மீடியன் மீது மோதி நின்றது மினி லாரி.

இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த வள்ளி (55), இளங்கொடி (55) மற்றும் கஸ்தூரி (50) ஆகிய 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி தப்பினார். தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 3 பெண்களையும் கோட்டக்கரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

அரியானா தேர்தல் பிரசாரம் இன்று முடிவடைகிறது: இறுதிகட்ட பிரசாரத்தில் கட்சிகள் மும்முரம்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள போர் விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார்!

பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி