தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்

சென்னை: தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். கடந்த 200 ஆண்டுகள் இல்லாத அளவில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று காலை தொடங்கி 27 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகள் தனித்தீவுகளாக மாறியுள்ளன. நெல்லை-பாபநாசம், நெல்லை – திருச்செந்தூர் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள், கூடுதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும். மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்கவும். மத்திய, மாநில அரசுத்துறைகள் இயல்புநிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. விரைவில் நிலைமை சீரடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி : பொதுமக்கள் நலன் கருதி, அண்ணா சதுக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாய்க்கு விஷம்: பகுஜன் சமாஜ் முன்னாள் நிர்வாகி கைது

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு