தமிழ்நாட்டில் உள்ள ஏகலைவன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசிடமே வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் கோரிக்கை

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள ஏகலைவன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசிடமே வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, ஏகலைவன் பள்ளி ஆசிரியர் நியமன முறை மாற்றத்தை எதிர்த்தார். அண்மைகாலம் வரை ஏகலைவன் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இதர ஊழியர்களும் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டு வந்தனர். எனினும் தற்போது பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் என்ற அமைப்பை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கியுள்ளது. ஏகலைவன் பள்ளி ஆசிரியர்களும் இதர ஊழியர்களும் தேசிய அமைப்பிம் மூலம் தேர்வு செய்யப்படுவதாக திருச்சி சிவா புகார் தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

வேளாங்கண்ணியில் இன்றிரவு தேர் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்; 3,500 போலீஸ் பாதுகாப்பு

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த 14 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை