சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்: தென்னக ரயில்வே அறிவிப்பு.. பயணிகள் குஷி..!!

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் தற்காலிக ஏற்பாடாக தாம்பரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் சென்றது. இதன் மூலம் தென் சென்னையில் மக்கள் அதிகளவில் பயனடைந்தனர். இதனிடையே 6 மாத தற்காலிக ஏற்பாடு ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் முடிவடைவதால் ஆகஸ்ட் 27 முதல் முன்பதிவு செய்ய முடியவில்லை.

இதனால் தாம்பரத்தில் தேஜஸ் ரயில் நிற்காது என கூறப்பட்டது. தாம்பரத்தில் நிரந்தரமாக நின்று செல்லும் வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 26ம் தேதி வரை தாம்பரத்தில் நின்று செல்லும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து நின்று செல்லும் என அறிவிப்பு வெளியாகி இருப்பதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு

12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்