எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

சென்னை: அரசு கவின் கலை கல்லூரி சார்பில், எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் நாளை முதல் வரும் 5ம் தேதி வரை நடைபெறும் ஓவியக் கண்காட்சியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:  கலை பண்பாட்டுத் துறை, சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி சார்பில் தமிழக ஓவியச் சிற்ப கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டினை ஏற்படுத்திடும் வகையில் ‘சென்னையில் ஓவிய சந்தை,’ எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் நாளை முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த ஓவிய சந்தையில் தமிழகத்தை சார்ந்த கலை வல்லுநர்களின் ஓவியம் மற்றும் சிற்ப கலை படைப்புகள் விற்பனைக்காக 100 அரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதனை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நாளை காலை 11 மணியளவில் துவங்கி வைக்கிறார். சென்னையில் முதன் முறையாக மிகப் பிரமாண்டமாக நடைபெறும் இந்த ஓவிய சந்தையை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான கலை படைப்புகளை வாங்கி கொள்ளலாம்.

 

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து