எக் பாஸ்தா

தேவையானவை:

பாஸ்தா – 2 கப்
தக்காளி – 1/4 பாகம்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
முட்டை – 2
பெரிய வெங்காயம் – ஒன்று
குடை மிளகாய் – 1/4 பாகம்
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் அபாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, குடை மிளகாய், தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக சேர்த்து வதக்கவும். அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் போடவும். நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும். முட்டை நன்றாக வதங்கியதும் வெந்த பாஸ்தா சேர்த்து சுருள விட்டு அடுப்பை அணைக்கவும். தேவை என்றால் காய்கறிகள் சேர்க்கலாம், சால்னா கூட சேர்க்கலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.

Related posts

தினை அரிசி வெஜிடபிள் உப்புமா

வேர்க்கடலைப்பருப்பு துவையல்

தர்பூசணி தோல் துவையல்