முட்டை இட்லி உப்புமா

தேவையான பொருட்கள்:

இட்லி – 4
முட்டை – 2
மிளகுப் பொடி – அரை ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ற அளவு.

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டை வேகும் வரை நன்கு கிளறவும். முட்டை வெந்தவுடன் உதிர்த்த இட்லியை சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான முட்டை இட்லி உப்புமா ரெடி.

 

Related posts

பன்னீர் அல்வா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி

தினை அரிசி வெஜிடபிள் உப்புமா