பணித்திறனை மேம்படுத்தும் வகையில் காவல் அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: கமிஷனர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கு பணித்திறனை மேம்படுத்தும் வகையில் கூடுதல் துணை கமிஷனர்கள் மற்றும் 33 உதவி கமிஷனர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாமை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் கூடுதல் துணை கமிஷனர்கள் மற்றும் 33 உதவி கமிஷனர்களுக்கு பணித்திறனை மேம்படுத்துவதற்கான 3 நாள் பயிற்சி முகாம் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. பயிற்சி முகாமை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.

அப்போது, காவல் அதிகாரிகள் பணியிலும், குடும்ப வாழ்விலும் சிறந்து விளங்கவும், மன நலனையும், உடல் நலனையும் பேணி காக்கவும் தகுந்த மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், தங்களுக்கு கீழ் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நலனை கையாள்வது, குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வது குறித்தும், பணியின் போது சக காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நடந்துகொள்ளும் முறை குறித்தும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மூத்த மனநல மருத்துவர் பிரபாகர், மனநல மருத்துவர் லட்சுமி, மனநல ஆலோசகர் செல்வி, சத்யதனக்கோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது