படிப்பு மட்டும் போதாது!

சமீபத்திய கணக்கெடுப்பில் முன்பைக் காட்டிலும் குழந்தைகள் படிப்பைத் தாண்டிய திறமைகளில் ஈடுபாடு செலுத்துவதில்லை என்கிறது சர்வே. காரணம் அதிகரித்துவிட்ட மொபைல் பயன்பாடு காரணமாக வீட்டைவிட்டே வெளியேற குழந்தைகள் அவ்வளவு சோம்பேறித்தனம் அடைவதாகவும் சலிப்பு அடைவதாகவும் தெரியவருகிறது. அதிலும் வீட்டில் இருக்கும் பெற்றோர், பெரியவர்கள் வெளியே சென்றுவிட்டால் நமக்கு இன்னும் கொஞ்ச நேரம் டிவி, அல்லது டேப் பயன்படுத்த வாய்ப்புக் கிடக்கும் என்பதாலேயே முடிந்தவரை குடும்ப நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லை, வெளியே குடும்பத்துடன் செல்லவும் விரும்புவதில்லை. மேலும் பெருகிவிட்ட டெக்னிக்கல் படிப்புகள், கணினி மயம் என குழந்தைகளை மதிப்பெண் வாங்க வைப்பதிலேயே பெற்றோர்களும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையை மாற்றவே ஜகதாலயா கிட்ஸ் பெஸ்ட் நிகழ்வை வருடந்தோறும் நடத்துகிறார்கள்.

ஜகதாலயா வழங்கிய கிட்ஸ் பெஸ்ட் 2023, குழந்தைகளுக்கான திறமையை வெளிப்படுத்தும் கலை சார்ந்த போட்டிகள் 30-4-2023 அன்று செயிண்ட் பேட்ரிக்ஸ் ஐசிஎஸ்இ காந்தி நகர் அடையாறில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நூற்றுக்கும் அதிகமான 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்குபெற்றுப் பரிசுகளை பெற்று சென்றனர். 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன, 6-8 வகுப்புகளுக்கான வகை 1 (வீரர்கள்), 3-5 வகுப்புகளுக்கான வகை 2 (தண்டர் போல்ட்ஸ்) மற்றும் 1 – 2 ஆம் வகுப்புகளுக்கான வகை 3 (டைனி டாட்ஸ்). குறிப்பாக எப்போதுமான போட்டிகளான கட்டுரை, பேச்சு, பாட்டு, நடனம் இவை களைத் தாண்டி இன்னும் குழந்தைகளின் மனநிலையை சுவாரஸ்யமாக மாற்றும் போட்டிகள் பல இந்த நிகழ்வில் இருந்தன.

வகை 1 போட்டிகள் – பானை ஓவியம், வகை 2 போட்டிகள் நினைவாற்றல் விளையாட்டு, காய்கறி செதுக்குதல், ஓவியம், வகை 3 போட்டிகள் – ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல், களிமண் மாடலிங், ஸ்லோகம்/கவிதை ஓதுதல் ஆகியவை நடைபெற்றன. சென்னை முழுவதிலும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் இந்த விழாவில் பங்கேற்றனர். சென்னையின் புகழ்பெற்ற சிபிஎஸ்இ பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியை மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பாளரான திருமதி ஜெய்தவே இந்த விழாவிற்கு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இப்படியான கலைகள் குழந்தைகளின் குணநலன்களை மாற்றும், மேலும் ஒருவித ஒழுக்கம், பக்குவநிலைகளை உண்டாக்கும். குறிப்பாக மனதை ஒருநிலைப்படுத்தும் இப்படியான பயிற்சிகள் மூலம் படிப்பிலும் முன்னேற்றம் தென்படும்.

கவின்

Related posts

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு