கல்விக்காக ஒரு செயலி!

வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர்கள் அறிந்துகொள்வதற்கு வசதியாக நவீன அம்சங்களுடன் புதிய செயலி ஒன்று அரசால் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எப்படிப் படிக்கிறார்கள், அவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கிறது, அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன என்பது பற்றி பெற்றோர் அறிய வேண்டும் என்றால் பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும். அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களைப் பற்றி பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றால், பெற்றோர்களை நேரில் அழைக்கும் நிலை இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு தகவல்களை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மாணவ/மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள். மேலும் அவர்களுக்கு நடக்கும் வெளிப்புற ஆபத்துகளும்கூட நேரடியாகக் குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா