ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயில வங்கிகள் வழங்கும் கடனிலும் லஞ்சம் பெறுவது கண்டத்துக்குரியது: ஐகோர்ட் கிளை
மதுரை: ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயில வங்கிகள் வழங்கும் கடனிலும் லஞ்சம் பெறுவது கண்டத்துக்குரியது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. கல்விக் கடனுக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் செல்வாக்கானவர்களின் குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என கூறி கல்விக் கடனுக்கு லஞ்சம் வாங்கிய வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.