உதய் மின் திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டதே மின் கட்டண உயர்வுக்கு காரணம்: தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்சார கட்டணம் உயர்வுக்கு காரணம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு சார்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 23-ம் ஆண்டு நினைவு தினம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாநில துணைத்தலைவர் கோபண்ணா, கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகரன், துணைத் தலைவர் மயிலை அசோக், மாநிலச் செயலாளர் சூளை ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் பா. சந்திரசேகர், சங்கு ராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம். எல்.ஏ., பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், ரங்கபாஷியம், எஸ்.ஏ.வாசு, காண்டீபன், மாநிலச் செயலாளர் அகரம் கோபி, எஸ்.சி.துறை மாநில பொதுச்செயலாளர் மலையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவாஜி கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து செல்வபெருந்தகை அளித்த பேட்டி: நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சர்மா திடீரென ராஜினாமா செய்துள்ளார் அதற்கான காரணம் குறித்து பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்.

ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங், இஸ்லாமியர்கள் குறித்து பேசியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 2026ல் கூட்டணி ஆட்சி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும். திமுக, காங்கிரஸ் கட்சிகள் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்சார கட்டணம் உயர்வுக்கு காரணம். எனினும் மக்களின் சுமையை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். திருச்சியில் மூடப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, முதலமைச்சருடன் பேசி மூன்று மாதத்தில் வேறு இடத்தில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் குழந்தைகள் நல அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு

கரூர் மாவட்டம் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவு

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு