கல்விக் கடனை ரத்து செய்ய எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழக கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திரும்பச் செலுத்த இயலாவிட்டால், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடனை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும் என திமுக வாக்குறுதி அளித்தது.

ஆனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களின் வீடுகளில், கடனை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர். கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் வங்கி ஜப்தி போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என்று மிரட்டி உள்ளனர். 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்: கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு

உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்லாதீங்க!: அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை

மதுபான மாபியா செய்தி வெளியிட்ட டிவி சேனல் நிருபர் மர்ம மரணம்?: பிரியங்கா காந்தி கண்டனம்