பாஜ கிட்ட இருந்து நாங்க விலகிட்டோங்க.. விலகிட்டோம்..திருப்பி திருப்பி சொல்றார் எடப்பாடி

அதிமுக மகளிர் அணி சார்பில் நேற்று காலை சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கேக் வெட்டினார். அதிமுக மகளிர் அணியின் சார்பில் நடந்த சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகி விட்டது என்று தெளிவாக அறிவித்து விட்டோம். அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதே பாஜ கட்சி நகராட்சி தேர்தலின்போது எங்கள் கூட்டணியில் இருந்து வெளியே போய்விட்டார்கள். அதேபோன்று, எங்களுடைய கட்சியின் நலன் கருதிதான் நாங்கள் செயல்படுவோம்.

எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து அதிமுக மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம். அவர் எப்படி எங்களை பற்றி சொல்ல முடியும். எங்கள் கட்சி கணக்கு எங்களுக்கு தெரியும். அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி. மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்பது எஙகளுக்கு நன்றாக தெரியும். எங்களுக்கு அவர் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு கூறினார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு