எடப்பாடி ஆட்சி கவிழாமல் தடுத்தோம்; ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் நாங்கள்தான் உயிர் கொடுத்தோம்: கொளத்தூரில் அன்புமணி பேச்சு

சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேப்பர் மில்ஸ் ரோடு பகுதியில் பாஜ வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து பாமக மாநில தலைவர் அன்புமணி பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி நாங்கள் துரோகம் செய்துவிட்டோம் எனக் கூறுகிறார். உங்களை ஒவ்வொரு முறையும் ஆட்சியில் வைத்தது தான் நாங்கள் செய்த துரோகமா? 1996ல் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறைக்குச் சென்றார். அப்போது அனைவரும் அந்த அம்மாவிற்கு வாழ்க்கையே முடிந்து விட்டது, இனி அரசியலுக்கு அவர் வர முடியாது, அதிமுக அழிந்துவிட்டது என பேசினார்கள்.

இரண்டு ஆண்டுகள் கழித்து பாமக அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. அப்போது நாங்கள் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் உயிர் கொடுத்தோம். ஜெயலலிதா முதலமைச்சராக வரவே முடியாது என்ற சூழல் இருந்த நேரத்தில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம். அதனால்தான் ஜெயலலிதா முதல்வர் ஆனார். 2019ல் நாங்கள் இல்லை என்றால் எடப்பாடி முதலமைச்சராக தொடர்ந்து இருக்க முடியாது. இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 9 தொகுதியில் வெற்றி பெற்றீர்கள். அதில் ஐந்து தொகுதிகளில் எங்களால் வெற்றி பெற்றீர்கள். நாங்கள் இல்லை என்றால் அன்று உங்களது ஆட்சி கவிழ்ந்திருக்கும். அன்று உங்களுக்கும், உங்களது ஆட்சிக்கும் உயிர் கொடுத்தது நாங்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்