வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளில் அமோகமாக வெற்றிப் பெறும்: புரட்சி பாரதம் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சி சார்பில், விழுப்புரம் அம்பேத்கர் திடலில் ‘’மனிதம் காப்போம்’’ மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை.எம்.ஜெகன் மூர்த்தி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் எம்.மாறன், ஐ.ஏழுமலை, கே.பலராமன், பி.வீரமணி, என்.செல்வம், பூவை.ஆர்.சரவணன், பி.தாமஸ்பர்ணபாஸ், பிரீஸ் ஜி.பன்னீர், பி.சைமன்பாபு, பி.பெரமையன், ஒய்.ஜான்சன் ஆம்ஸ்ட்ராங், ஏ.சிலம்பரசன், டி.கே.சீனிவாசன், எஸ்.ஏகாம்பரம், என்.மதிவாசன், கே.எஸ்.ரகுநாத், ஏ.ரமேஷ், எம்.மணிமாறன், டிகேசி.வேணுகோபால், சிட்கோ இ.ராஜேந்திரன், சென்னீர் ஜி.டேவிட்ராஜ், நயப்பாக்கம் மோகன், ராக்கெட் ரமேஷ், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் செஞ்சி ஜே.ஜவஹர், காட்டுப்பாக்கம் எஸ்.டேவிட், தொழுவூர் டிஎம்எஸ்.கோபிநாத், ஒதப்பை டி.துளசிராமன், பூந்தமல்லி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஏ.கே.சிவராமன், எம்.பாண்டுரங்கன், கே.வடிவேல் முன்னிலை வகித்தனர்.

மாநில நிர்வாகிகள் மணவூர் ஜி.மகா, பரணி மாரி, கூடப்பாக்கம் இ.குட்டி, வளசை எம்.தர்மன், வியாசை ப.சிகா, ஆகியோர் வரவேற்று பேசினர். முதன்மை செயலாளர் டி.ருசேந்திரகுமார், மாநில நிர்வாகிகள் பா.காமராஜ், பழஞ்சூர் ப.வின்சென்ட், வழக்கறிஞர் அணி பொதுச்செயலாளர் கே.எம்.ஸ்ரீதர் முன்னிலை உரையாற்றினர். இந்த மாநாட்டில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; உடலும் உயிரும்போல அதிமுகவும் புரட்சி பாரதமும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. இதை யாராலும் பிரிக்க முடியாது. 46 ஆண்டுகாலம் ஒரு இயக்கம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு வருகிறது என்று சொன்னால் அது புரட்சி பாரதம் கட்சி தான். அதிமுக கூட்டணி பொது நலம் சார்ந்த கூட்டணி.

அதிமுக வில் உழைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வரலாம். கூட்டணி கட்சிகளை வளர்ப்பது தான் அதிமுக. வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில், எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, பா.பென்ஜமின், பி.வி.ரமணா, முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் வி.மூர்த்தி, எஸ்.அப்துல்ரஹீம், வி.சோமசுந்தரம், டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்எல்ஏக்கள் சிறுனியம் பி.பலராமன், வி.அலெக்சாண்டர், என்எஸ்ஏ.இரா.மணிமாறன், பூவை கே.எஸ்.ரவிச்சந்திரன், சி.ஒய்.ஜாவித் அகமது, சார்லஸ், நேமம் யு.ராகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!