முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் எடப்பாடியை ஒப்பிடுவதா? அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்

மதுரை: ல்வர் மு.க.ஸ்டாலினை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிட்டு பேச கூடாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். துரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில், பிரபல பின்னணி பாடகர் மறைந்த டி.எம்.சௌந்தரராஜனின் உருவச்சிலை அமைய உள்ள இடம் மற்றும் கலைஞர் நூலகம் ஆகியவற்றை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.  பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தமிழகத்தில் ஒரு நூலகம் வேண்டும் என்பதற்காக, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து உத்தரவிட்டார். இதற்கான பணி நிறைவடைய உள்ளது. 5 முறை முதல்வராக இருந்த கலைஞர் சென்னையில் அண்ணா நூலகத்தை நிறுவினார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை அமைத்துள்ளார்.

ஜூலை 15ல் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடும் வகையில், இந்த நூலகத்தை தமிழக மக்களுக்காக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். தென்னக மக்களின் படிப்பு திறனை அதிகரிக்க இந்த நூலகம் உதவும். அமைச்சர் சேகர் பாபு, ஒவ்வொரு கோயில்களிலும் கால நேர பூஜை நடைபெறுகிறதா என நேரில் ஆய்வு செய்து வருகிறார். திமுக ஆட்சியில்தான் கோயில் குடமுழுக்கு அதிகளவில் நடந்துள்ளன. எம்எல்ஏவாகவும், மேயராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்து பயிற்சி பெற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை, அவதூறாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். மு.க.ஸ்டாலினுடன், எடப்பாடியை 50 சதவீதம் கூட ஒப்பிட்டு பேச முடியாது. மதுரை கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ மருத்துவமனை பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் துவங்க உள்ளன. வ்வாறு அவர் கூறினார்.

Related posts

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்