எடப்பாடி பேனர்கள் கிழிப்பு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சி மையத்தை முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதையொட்டி, அவரை வரவேற்க அரூர்- ஊத்தங்கரை சாலை, சேலம் சாலை என பல்வேறு இடங்களில் 20க்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அரூர் – சேலம் சாலையில் உள்ள ஏரிக்கடை, பைபாஸ் சாலை, ஊத்தங்கரை சாலை, அரூர் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, கச்சேரிமேடு என 20க்கும் மேற்பட்ட இடங்களில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைத்திருந்த பேனர்களை மர்ம நபர்கள் பிளேடால் அறுத்து கிழித்திருந்தனர். இதையடுத்து கோஷ்டி மோதலில் பேனர்கள் கிழிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு