எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகம் பட்டுப்போய் இருந்தது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகம் பட்டுப்போய் இருந்தது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத இடங்களை புதிய திட்டங்களுக்கு செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகம் பட்டுப்போய் இருந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை. தற்போதுதான் அம்மா உணவகத்தில் எல்லாம் தரமாக இருக்கிறது.

அம்மா உணவகம் பட்டுப்போய் இருந்தது, அது கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் அதைக் கையில் எடுத்ததற்கு பழனிசாமி வரவேற்றிருக்க வேண்டும், பாராட்டி இருக்க வேண்டும். வஞ்சக எண்ணத்தோடு குறுகிய புத்தியோடு அதை விமர்சனம் செய்வதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதிரியாக இருந்தாலும் துரோகியாக இருந்தாலும் கருணை உள்ளம் கொண்டு ஏற்றுக்கொள்ளக்கூடியவர் முதலமைச்சர். கரைந்து கொண்டே இருக்கும் அதிமுக, காணாமல் போய்விடும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் என்று கூறினார்.

தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் திமுக மீது வைக்கும் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்; “எனக்கு அவர் யாரென்று தெரியவில்லை. அவர் அரசியல் வாதியாக இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும் என்று கூறினார்.

Related posts

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி

ரேசன் அரிசி கடத்தி வந்த கார் மோதி விபத்து: ஒருவர் பலி