நாளை விசாரணைக்கு ஆஜராக ஜார்க்கண்ட் முதல்வருக்கு ஈடி மீண்டும் சம்மன்

ராஞ்சி: ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்களின் உரிமையை மாற்றியதாகவும் , இதன் மூலம் பல கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் 14 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கடந்த 20ம் தேதி முதல் முறையாக முதல்வரின் வீட்டுக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. எனினும் விசாரணை முழுமை பெறாத நிலையில் வருகிற 29 அல்லது 31ம் தேதி முதல்வர் சோரன் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்