ரூ.89.86 லட்சம் பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி: திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கூட்டுறவு செயல் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான ஆ.க.சிவமலர், கூட்டுறவுசங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி முன்னிலை வகித்தனர். இதில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வங்கி கடன் உதவிக்கான கசோலையினை வழங்கினார்.

8 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த அங்கத்தினர்களுக்கு ரூ.83.86 லட்சம், 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம், கைம்பெண்கள் கடன் ரூ.0.50 லட்சம், பண்ணைச் சாராக் கடன் ரூ.0.50 லட்சம் உழைக்கும் மகளிர் கடன் ரூ.2 லட்சம் மகளிர் தொழில் முனைவோர் கடன் 3 நபர்களுக்கு ரூ.1.50 லட்சம் மற்றும் எம்எஸ்எம்இ கடன் 1 நபருக்கு ரூ. 0.50 லட்சம் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.89.86 லட்சம் பொருளாதார மேம்பாட்டுக் கடனுதவி மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதில் துணைப் பதிவாளர்கள் பொவிதி ஆர்.இரவி, வே.சீனிவாசன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் தே.சிவக்குமார் கலந்துகொண்டனர்.

 

Related posts

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்