ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம்: ஒரே மாதத்தில் இது 4வது முறை


காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே மாத்தில் இது 4வது முறை ஏற்பட்ட நிலநடுக்கமாகும். ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதை வீடுகளில் இருந்த பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். சிலர் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர். கடந்த 7ம் தேதி ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 4 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்து விட்டன என தலிபான் அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதுபற்றி அந்நாட்டு பேரிடர் மேலாண் அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘20 கிராமங்களில் இருந்த 1,983 குடியிருப்பு வீடுகள் அழிந்து விட்டன’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கடந்த 11ம் தேதி ரிக்டரில் 6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பின்னர், 13ம் தேதி ரிக்டரில் 4.6 அளவிலான நிலநடுக்கமும், 15ம் தேதி ரிக்டரில் 5.4 அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த மாதத்தில் 4வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்