பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவுக்கு சென்று சூரியனை ஆராயும் ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ தகவல்

சென்னை: சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆராயும் முனைப்பில் செப்டம்பர் 2ம் தேதி காலை 11:50 மணிக்கு ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலனை வெற்றிகரமாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் இந்த ஆதித்யா திட்டம் கடந்த 2008ம் ஆண்டு முதன்முறையாக கருத்துகள் ஆலோசிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. தற்போது அது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கொரானா மற்றும் சூரியனின் முதல் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது. நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கும். மீதமுள்ள மூன்று பேலோடுகள், லாக்ரேஞ்ச் புள்ளி L1ல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இதற்காக கடந்த 2016ம் ஆண்டு முதல் பணிகள் துவங்கப்பட்டது, தற்போது ஆதித்யா எல்1 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் தற்போது தயாரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வேளி ஆராய்ச்சி மையத்தற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உடன் ஹாலோ ஆர்பிட் எனப்படும் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த விண்கலம் 120 நாட்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளது. இந்த விண்கலம் சுமார் 1500 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதித்யா எல்1 செப்டம்பர் 2ம் தேதி காலை 11:50 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

* இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு:
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1, வருகிற செப்டம்பர் 2, 2023 அன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காண விரும்புபவர்கள் https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp… என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

* பள்ளத்தை பார்த்ததும் பாதையை மாற்றிய ரோவர்
நிலவில் தரையிறங்கிய ரோவர் பயணித்தபடி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 27ம் தேதி, ரோவர் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை அதன் இருப்பிடத்திலிருந்து 3 மீட்டர் முன்னால் கண்டது. இதனால் பாதையைத் திரும்ப பெற ரோவருக்கு கட்டளையிடப்பட்டது. இப்போது பாதுகாப்பாக புதிய பாதையில் சென்று கொண்டிருக்கிறது என இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகிகள் 6 பேர் கைது

பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்