புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட்

ஆந்திரா: புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 500 கிலோ வரை எடைகொண்ட செயற்கைகோள்களை 500 கி.மீ. உயரம் வரை புவி தாழ்வட்ட பாதைக்கு எடுத்துசெல்லும்; பேரிடர் கால கண்காணிப்பு, காலநிலை, காட்டுத் தீ கண்காணிப்பு பணிகளை இ.ஒ.எஸ்-8 செயற்கைகோள் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் காற்றின் வேகம், மண்ணின் ஈரப்பதம், ஹிமாலய மலையின் பனிப்பொழிவு அளவு தரவுகளையும் இஓஎஸ்-8 தரவல்லது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு