இணையவழி சூதாட்டம்.. சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துகிறது; பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்: முருகானந்தம் பேச்சு!!

சென்னை: இணையவழி சூதாட்டம், விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துவதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரக கூட்ட அரங்கில் இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இந்த பிரசாரத்தை தலைமைச் செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் பேசிய அவர்; இணையவழி சூதாட்டம், இணையவழி விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், கொரோனா காலகட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுகள் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் பரவியது என்றும், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் இதனை ஒழுங்குபடுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், திமுக அரசு இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடுக்க சட்டம் இயற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இணையவழி சூதாட்டம் விளையாட்டு தொடர்பாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.

Related posts

போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்

செப்டம்பர் 16: சர்வதேச ஓசோன் தினம்