சாணத்தில் ஒளிரும் தீபங்கள்!

பெண்கள் நினைத்தால் உத்தரபிரதேசத்தின் தொலைதூர கிராமமான பண்டாவில் உள்ள பெண்கள் பசுவின் கழிவுகளை விளக்குகளாக மாற்றி அதில் வருமானம் ஈட்டி வருகிறார்கள். இதை எப்படி சாத்தியப்படுத்தினார்கள்? கழிவுகளை காசாக்கும் பயனுள்ள முறையைக் கண்டறிந்த, பண்டா மாவட்ட மாஜிஸ்திரேட் துர்கா சக்தி நாக்பால் மற்றும் அவரது குழுவினருக்கு தங்களின் நன்றிகளை தெரிவிக்கிறார்கள் பாண்டா மாவட்ட கிராமப் பெண்கள் . அஜீவிகா இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஐஏஎஸ் அதிகாரி துர்காசக்தி பல பெண்களுக்கு இந்த சுற்றுச்சூழல் நண்பனான மாட்டுச் சாண சிட்டி விளக்குகள் உருவாக்கப் பயிற்சி அளித்தார். இந்த முயற்சி பல பெண்களுக்கு புதுமையான முறையில் மாட்டு சாணத்தைப் பயன்படுத்தி அதன் மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்பை வழங்கியது. தீபாவளி துவங்கி அடுத்தடுத்து கார்த்திகை தீபத் திருவிழாவும் வரும் காலம் அருகில் இருப்பதால். சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளாக இந்த கோபார் தியாக்கள் (மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட விளக்குகள்) விளங்கும். குறிப்பாக இந்தத் தியாக்கள் தொல்லைதரும் பூச்சி களைத் தடுக்க உதவியாக இருக்கும். விளக்குகள் நன்கு எரிந்த பின் கிடைக்கும் சாம்பலை பாத்திரம் கழுவவும், செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். மற்ற வீடுகளில் ஒளியை அள்ளிக் கொடுக்கும் இந்த தியாக்கள் எங்களுக்கு வாழ்க்கையின் ஒளியைக் கொண்டுவர பயன்படுகின்றன, என்கின்றார் கிராமத்தைச் சேர்ந்த பல பெண் தியா மேக்கர்களில் ஒருவரான கமலா. 20 விளக்குகள் ரூ.100 வரை விற்பனைக்குள்ளன. ரூ. 3ல் இருந்து கூட இந்த விளக்குகள் விற்கப்படுகின்றன. மேலும் அமேசான், ஃபிலிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் கூட இவைகள் விற்பனைக்கு உள்ளன.

அஜீவிகா இயக்கம்

ஏழைப் பெண்களுக்கு தொழிற் பயிற்சிக் கொடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் திட்டம். உங்கள் பகுதி கலெக்டர் அலுவலகதையோ அல்லது கிராமப்புற பஞ்சாயத்து அலுவலகங்களையோ தொடர்பு கொண்டால் இப்படியான இலவச கிராமப்புறத் தொழிற்பயிற்சி நாட்கள் குறித்த விவரங்கள் கிடைக்கும். மாட்டுச் சாணத்தைக் கொண்டு விளக்குகள் மட்டுமின்றி, உரம் தயாரிப்பு, செடி வளர்க்க உதவும் மாட்டுச்சாண கேக்குகள் தயாரிப்பு, சாம்பிராணிகள் என பல வகையான பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன. சீசனுக்கு ஏற்றாற் போல் கைவினைப் பொருட்கள், கூடை பின்னுதல்,போன்றவைகளும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.
– கவின்

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா