நிலுவை வழக்குகளால் நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை போய்விடும்: உச்சநீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளால் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை போய் விடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரவீந்தர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,‘‘ கடந்த 1982ல் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. 43 ஆண்டுகளாகியும் வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதே போல் ஆமை வேகத்தில் வழக்கு நடைபெற்று வந்தால், நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை போய்விடும். சில வழக்குகள் 50 ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதே போல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும்’’ என்றனர்.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்