நிதி நிறுவன உரிமையாளர் இறந்துவிட்டதால் ரூ.30 கோடியை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் புகார்

செங்கல்பட்டு: நிதி நிறுவனம், நகை கடை நடத்தி, பல கோடி மோசடி செய்த உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டதால், பணம் கட்டி ஏமாந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஜார் பகுதியில் யுவஸ்ரீ பைனான்ஸ் மற்றும் ஏகே ஜுவல்லரியை அனந்தகிருஷ்ணன் என்பவர் நடத்தி வந்தார். கடந்த நான்காம் தேதி இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். யுவ ஸ்ரீ பைனான்ஸில் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் என 500க்கும் மேற்பட்டோர் ஒரு லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சீட்டு பணம் மற்றும் நகைச்சீட்டு கட்டி வந்துள்ளனர்.

இதனிடையே, அனந்த கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், அவரது அலுவலகம் கடைகள் ஆகியவற்றை மூடியுள்ளனர். இதனால், சீட்டு பணம் கட்டியவர்கள் அனந்தகிருஷ்ணனின் உறவினர்களிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் பணத்தை திருப்பி தர முடியாது என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்

செங்கல்பட்டு கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அதில், அனந்த கிருஷ்ணன் சுமார் ரூ.30 கோடிக்கு மேல் பணத்தைப் பெற்று சொகுசு வீடு, திருமண மண்டபம் உள்ளிட்டவற்றை கட்டி உள்ளார். எங்களிடம் பணத்தை பெற்றதாற்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளதாகவும், அனந்த கிருஷ்ணனின் சொத்துக்களை ஜப்தி செய்து தங்களுடைய பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா