துபாயில் தவித்த 3 இளைஞர்கள் மீட்பு: ஈமான் கலாசார மையம் நடவடிக்கை

சென்னை: ஏஜென்ட் மூலம் ஏமாந்து துபாயில் தவித்து வந்த கடலூரை சேர்ந்த 3 இளைஞர்களை ஈமான் கலாசார மையம் மூலம் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் வடக்கசாவடியை சேர்ந்த சதீஷ், சிலம்பரசன், அரவிந்த் ஆகியோர் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் ஏஜென்டிடம் கொடுத்துள்ளனர். அந்த ஏஜென்ட், ‘துபாயில் பெரிய நிறுவனத்தில் வேலை’ என ஏமாற்றி துபாய் அனுப்பியுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு உரிய வேலை தரப்படாததால் பெரும் அவதிக்கு ஆளானார்கள். மேலும் அந்த நிறுவனத்தார், பாஸ்போர்ட்டையும் பறித்து கொண்டதால் உணவு மற்றும் தங்கும் இடம் இல்லாமல் சாலையோர பூங்காவில் படுத்து உறங்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இதுகுறித்து தமிழ் சமூக நல அமைப்பான ஈமான் கலாசார மையத்தின் பொது செயலாளர் ஹமீது யாசினிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 3 பேரும் ஈமான் அலுவலகம் அழைத்து வரப்பட்டு ஒரு மாதமாக அவர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்கப்பட்டன. மேலும், புதிய பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் அரசு அதிகாரிகளின் உதவியோடு ஊர் செல்வதற்கான உரிய அனைத்து ஆவணங்களும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.இதன் தலைவர் ஹபீபுல்லாகான் வழிகாட்டுதலில் பொதுச் செயலாளருடன் ராசிக், இம்தாதுல்லா, அஸ்கர் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். இதற்கான சென்னை செல்வதற்கான‌ விமான டிக்கெட்டுகள் ஈமான் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. நேற்று இரவு பத்திரமாக அவர்கள் தாயகம் திரும்பினர்.

Related posts

“ஒருவருடம் காத்திருந்து ரெக்கி ஆபரேஷன்’’ 5 முறை முயற்சி தோல்வியில் முடிந்தது: 6 வது ஸ்கெட்சில் தீர்த்து கட்டினோம்: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பகீர் தகவல்கள் அம்பலம்

பயணிகளின் உடைமைகளை தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்!

3 புதிய குற்றவியல் சட்டம்.. மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: அமித்ஷாவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்..!!